மாட்ரிட், ஸ்பெயினில் நேற்று முன் தினம் பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில், ஆறு பயணியர் பரிதாபமாக உயிரிழந்தனர்; இருவர் படுகாயமடைந்தனர்.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் பென்டேவேத்ரா மாகாணத்திலிருந்து, செர்டெடோ பகுதிக்கு எட்டு பயணியருடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இது, கலீசியா பகுதியில் லெரெஸ் ஆற்றின் மீதுள்ள பாலத்தை கடக்க முயன்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. உள்ளூர்வாசி மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பஸ்சிலிருந்து ஆறு உடல்களை மீட்டனர்.
உயிருக்கு போராடிய டிரைவர் மற்றும் ஒரு பயணி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
”மோசமான வானிலை காரணமாக பஸ் ஆற்றில் கவிழ்ந்து இருக்கலாம்,” என மாகாணத் தலைவர் அல்போன்சோ ரூடா தெரிவித்தார். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement