ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி

கொச்சி,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில நடந்து வருகிறது. இதில் இன்று கொச்சியில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் சந்தீப் சிங் ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.