போபால் மத்திய பிரதேசத்தில்,காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் அரசு பங்களாவில் கல்லுாரி மாணவர்ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள ஷியாமளா ஹில்ஸ் பகுதியில், காங்., – எம்.எல்.ஏ., ஓம்கார் சிங் மார்கத்தின் அரசு பங்களா உள்ளது.
இங்குள்ள ஒரு அறையில், தீரத் சிங் என்ற கல்லுாரி மாணவர், கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவரின் உடலருகே இருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவரின் பெற்றோர் மற்றும் அவருடன் தங்கி இருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீரத் சிங் புற்றுநோயால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement