கிறிஸ்துமஸ் தினத்தில் கூட திரும்பவில்லை! பிரித்தானியாவில் 13 வயது சிறுமியை நினைத்து கவலையில் குடும்பம்


பிரித்தானியாவில் 13 வயது சிறுமி காணாமல் போன நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று கூட வீடு திரும்பாதது குடும்பத்தாரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானிய சிறுமி மாயம்

Simmons Walk, Basingstokeல் கடைசியாக கடந்த 21ஆம் திகதி காணப்பட்ட லைலா (13) என்ற சிறுமி பின்னர் மாயமானார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று கூட அவர் வீட்டிற்கு வரவில்லை, இதன் காரணமாக குடும்பத்தார் லைலாவின் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
இதையடுத்து காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் தினத்தில் கூட திரும்பவில்லை! பிரித்தானியாவில் 13 வயது சிறுமியை நினைத்து கவலையில் குடும்பம் | Uk Girl Missing Does Not Return Christmas

Hampshire Police

சாதாரண உடல்வாகு கொண்டவர் 

சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் லைலா என்று விவரிக்கப்படும் நிலையில் சாதாரண உடல்வாகு கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன போது கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான உடையை அணிந்திருந்தார் என கூறப்பட்டுள்ளது.

அவரை பார்த்தாலோ அல்லது எந்தவொரு தகவல் தெரிந்தாலோ உடனடியாக 999 எண்ணுக்கு போன் செய்யுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.