சென்னை: வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று (டிச.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “2023-ம் ஆண்டு தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நிகழ்வான, ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 174 (1)-ன்படி ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, 2023-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி, காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில், ஆளுநர் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த வருகைதர இசைவு தெரிவித்துள்ளார்.
அன்றைய தினமே அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்” என்று அவர் கூறினார்.