புதுடில்லி, தலைநகர் புதுடில்லியில் மூன்றடுக்கு ‘கார் பார்க்கிங்’கில் நேற்று அதிகாலை தீப்பற்றியதில், 21 கார்கள் எரிந்து சேதம் அடைந்தன.
புதுடில்லியின் சுபாஷ் நகரில் மூன்றடுக்கு கார் பார்க்கிங் உள்ளது. இங்கு, ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதன் தரைத்தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தன.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடி, காலை 6:10 மணிக்கு தீயை அணைத்தனர்.
அதற்குள், 21 கார்கள் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தன. இதையடுத்து, போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில், அதிகாலை நேரத்தில் சந்தேகத்துக்கு உரிய ஒரு நபர் கார் பார்க்கிங்கில் உலாவியது தெரிய வந்துள்ளது. அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement