அகர்தலா: 60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஆளும் பாஜ சார்பில் அங்கு ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக தகவல் மற்றும் கலாசார துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜ தலைமை செய்தி தொடர்பாளர் சுபர்தா சக்ரவர்த்தி கூறுகையில், ‘‘தேர்தலையொட்டி பொதுமக்களின் ஆசிர்வாதத்தை பெறுவதே ரத யாத்திரையின் நோக்கமாகும். பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு மக்கள் யாத்திரையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.