‛துணிவு' படத்திற்கு துணிச்சல் புரமோஷன் : வானில் குதித்து சாகசம்

வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‛துணிவு'. மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் சமுத்திரகனி, ஜிஎம் சுந்தர், ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில் அடுத்தடுத்து பட அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த படத்தில் இருந்து ‛சில்லா சில்லா, காசேதான் கடவுளடா' பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று மூன்றாவதாக கேங்க்ஸ்டா பாடல் வெளியானது. 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 40 லட்சம் பார்வைகளை நெருங்கி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் லைகா நிறுவனம் அங்கு புரமோஷனை அமர்க்களப்படுத்தி வருகிறது. வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் குழுவினர் துபாயில் விமானத்தில் இருந்து துணிச்சலாக குதித்து துணிவு படத்தின் அப்டேட் டிச., 31ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதை வைத்து பார்க்கையில் அன்றைய தினம் படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படத்தின் இந்த துணிச்சலான புரமோஷனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி டிரெண்ட் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.