நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்காக சேனை, சேம்பு அறுவடை தொடங்கியது

நெல்லை: பொங்கல் பண்டிகைக்காக அம்பை  வட்டாரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட சேம்பு, சேனை அறுவடை தொடங்கியுள்ளது. தைப்பொங்கல்  பண்டிகை வருகிற ஜனவரி 15ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு  இன்னும் 20 தினங்களே உள்ள நிலையில் பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள்,  காய்கறிகள் உள்ளிட்டவை அறுவடை தற்போது தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு பல மாதங்களுக்கு முன்னரே பயிர் செய்யப்பட்ட கிழங்கு வகைகள்  தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

குறிப்பாக  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரம் பள்ளக்கால் ெபாதுக்குடி, பொட்டல்  உள்ளிட்ட பல பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் சேம்பு,  சேனை கிழங்குகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே விவசாயிகள்  பயிரிட்டிருந்தனர். இவை தற்போது நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகி விட்டன. இதையடுத்து அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து  விவசாயி முருகன் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி பயிரிடப்பட்ட  சேம்பு, சேனை கிழங்குகளை தற்போது அறுவடை செய்யத்ெதாடங்கியுள்ேளாம்.

2  ஏக்கர் நிலத்தில் குறைந்தது ஒரு டன் அளவிற்கு அறுவடையாக வாய்ப்பு உள்ளது.  அறுவடைக்கான பணியாளர் கூலி அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆண்களுக்கு  ஒரு நபருக்கு ரூ.750ம், பெண்களுக்கு ரூ.250ம் கூலி வழங்க வேண்டும்.  வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்வார்கள். அவர்கள் ஒரு கிலோ ரூ.25 விலையில் சேனை கிழங்கு கொள்முதல் செய்வார்கள். சேப்பங்கிழங்கு ஒரு கிலோ  ரூ.40 வரை கொள்முதல் செய்யப்படும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.