சென்னை : சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி நெஞ்சு வலியால் உயிரிழந்தார். இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராகவேந்திரா (65), மனைவி உதயராணி (54) தம்பதி தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தனர். சுற்றுலாவை நிறைவு செய்த ராகவேந்திரா தம்பதி இலங்கை திரும்ப சென்னை விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் பெற்று சோதனை பிரிவில் நின்றிருந்தபோது ராகவேந்திராவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
