வேலூர் : வேலூர் அருகே நிலம் விவகாரத்தில் திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டல் விடுத்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள பெரிய போடிநத்தம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நாகேஷ் (50). இவரது நிலத்தின் அருகே கிருஷ்ணன் என்பவரது […]