ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக அங்கு விற்கப்படும் பஞ்சாமிர்தம் பலரின் விருப்பம். தற்போது சபரிமலை சீசன் என்பதாலும் தைப்பூசத் திருவிழா நெருங்கும் நிலையில் இருப்பதாலும் தற்போதையிலிருந்தே பாதயாத்திரை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இந்நிலையில் கோயில் சார்பில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் அரை கிலோ கொண்ட பெட்டிகள் 35 ருபாய் ,அரை கிலோ சீல்டு பெட்டி 40 ரூபாய்க்கும் தூய்மையான முறையில் இயந்திரம் மூலம் கைப்படாமல் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.பாத விநாயகர் கோயில், ரோப் கார் நிலையம், சுற்றுலா வாகனம் நிறுத்துமிடம்,மின் இழுவை ரயில் நிலையம் எதிரே உள்ள விற்பனை நிலையம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை கூடங்கள் அமைத்து விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது பல்வேறு இடங்களில் கோயில் சார்பில் விற்பனை செய்யும் பஞ்சாமிர்த கூடங்களில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் இன்று காலை முதல் பஞ்சாமிர்தம் வாங்க முடியாமலும் ஏமாற்றத்துடன் தனியார் கடைகளில் வாங்கிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.உடனடியாக பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் கிடைக்க கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.