புத்தாண்டின் தொடக்கத்தில் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை
கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையானது 10 மாத முழுநீள போராக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் இரண்டு தரப்பிலும் கொல்லப்பட்ட நிலையில், ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தொடர்ந்து அறிவித்து வருகிறது.
ஆனால் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் கைப்பற்றிய ஒவ்வொரு செ.மீ இடத்தையும் மீட்காமல் உக்ரைன் பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்தது இருந்தது.
புத்தாண்டில் அமைதி பேச்சுவார்த்தை
இந்நிலையில் உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்த தகவலில், போர் வெடித்த ஆண்டு நிறைவை சுற்றி பிப்ரவரி இறுதிக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை உக்ரைன் நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அமைதி பேச்சுவார்த்தை ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கக்கூடும் என்றும், பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் சாத்தியமான மத்தியஸ்தராக இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Kyiv wants to hold a peace summit at the UN in the coming months, Ukrainian Foreign Minister Dmytro Kuleba told AP.
According to him, the Ukrainian government would like to hold the summit by the end of February, and the chairman should be UN Secretary-General António Guterres. pic.twitter.com/Ah1CTcGvIY
— NEXTA (@nexta_tv) December 26, 2022
அத்துடன் உக்ரைனில் நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் ராஜதந்திரம் முக்கிய பங்கு வகிக்கும், “ஒவ்வொரு போரும் பேச்சுவார்த்தை மேசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாகவே முடிவடைகிறது” என்றும் குலேபா தெரிவித்துள்ளார்.