வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அகமதாபாத்: குஜராத்தில் தன் மகளின் ஆபாச ‘வீடியோ’வை இணையத்தில் வெளியிட்டதை தட்டிக்கேட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரரை, ஒரு கும்பல் அடித்து கொலை செய்தது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

குஜராத்தின் நடியாட் மாவட்டத்தில் உள்ள சக்லசி கிராமத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், விடுமுறையில் தன் குடும்பத்தை காண வந்து உள்ளார். அப்போது, தன் மகளின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக, அவர் தன் மகளிடம் விசாரித்ததில் உடன் படிக்கும் மாணவன்தான் இதை செய்துள்ளார் என குறிப்பிட்டு உள்ளார்.
இதையடுத்து அந்த மாணவனின் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்ற போது, அவனுடைய உறவினர்கள் அடித்து தாக்கியதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் இறந்து உள்ளார். இது குறித்து போலீசார் கூறியதாவது: ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவிட்டது தொடர்பாக கேட்கச்சென்ற எல்லை பாதுகாப்பு படை வீரரையும் அவரது குடும்பம் பற்றியும், மாணவனின் உறவினர்கள் அவதுாறாக பேசி உள்ளனர்.

இதை எதிர்த்த எல்லை பாதுகாப்பு படை வீரரை, அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் எனக் கூறினார்.
சம்பவம் குறித்து ராணுவ வீரரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் சக்லாசி போலீசார் வழக்கு பதிவு செய்து, 7 பேரை கைது செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில், கொலை செய்யப்பட்டவரின் மகளும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறுவனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அவர்களுக்குள் உறவு இருந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement