
மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. அம்மாநிலம் முழுவதும் அம்மை தொற்றால் 1,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மும்பையில் மட்டும் அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 514 ஆக உள்ளது. இதுவரை அம்மை பாதிப்பால் 20 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக இருந்தது. அம்மை நோயால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், தும்மல் மற்றும் இருமல் மூலம் அம்மை பரவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனிமைப்படுத்துவது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நோயால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். தடுப்பூசியினால் தட்டம்மை பாதிப்பு வராமல் தடுக்க முடியும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், மீண்டும் இந்த வைரஸ் தொற்றால் தட்டம்மை நோய் அதி வேகமாக இந்தியாவில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.