#BREAKING : புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த தமிழ்நாடு காவல்துறை..!!

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாட தமிழக காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

  • 31 ஆம் தேதி இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
  • புத்தாண்டு நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை
  • புத்தாண்டின் போதும் கடற்கரையில் மக்கள் கடல்நீரில் இறங்கி கொண்டாடக்கூடாது.
  • வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
  • நள்ளிரவுகளில் தேவையில்லாமல் பைக்களில் சுற்ற கூடாது
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது

31ம் தேதி மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுவார்கள் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.