ஈரோடு சத்தி சாலையில் ஐஸ்வர்யா மகளிர் & செயற்கை கருத்தரிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் உள்ளே இயங்கும் ஸ்கேன் சென்டர் உரிமம் இல்லாமல் தொடர்ந்து இயங்கி வருவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மருத்துவ கண்காணிப்பு குழுவிற்கு புகார் வந்தது.
இதையடுத்து மருத்துவமனையை ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் உரிமம் இல்லாமல் ஸ்கேன் மையம் இயங்கி வந்ததும் தற்போது உரிமம் இருப்பதும் தெரியவந்தது. எனினும் உரிமம் இல்லாமல் பல நோயாளிகளுக்கு ஸ்கேன் செய்யப்பட்ட காரணத்தால் ஸ்கேன் மையத்திற்கு மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் சீல் வைத்தார்.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அளித்தனர். இந்த மருத்துவமனையின் கிளைகள் கர்நாடகா, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, தெலங்கானா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மொரிசியஸ் என பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.
newstm.in