அருவியில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய இளைஞர்!!

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவியில் தற்போது குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க வந்தனர். அப்போது பெண் ஒருவர் தனது 4 வயது மகளுடன் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த குழந்தை திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனை கண்ட குழந்தையின் தாயும், அருகிலிருந்தவர்களும் கத்தி கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்க முயன்றனர்.

அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் துணிச்சலாக சென்று சிறுமியை காப்பாற்றினார். பின்னர் அந்த இளைஞர் குழந்தையை தூக்கி கொண்டு மேலே வந்தார்.

தொடர்ந்து சிறுமியை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தையை மீட்ட இளைஞருக்கு பாராட்டு குவிகிறது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.