பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது வரை 80 நாள் கடந்துள்ளது. மொத்தம் 21 போட்டியார்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 9 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். அதன்படி பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது, இதனால் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வரத் தொடங்கி இருக்கின்றனர். அதன்படி முதலில் மைனா நந்தினி, ஷிவின் மற்றும் அமுதவாணனின் குடும்பத்தினர் வந்து செய்திருந்தனர்.
பின்னர் அடுத்ததாக நேற்று புதன்கிழமை மணிகண்டன், ரச்சிதா மற்றும் ஏடிகே ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். இன்று முதலாவதாக கதிரவனின் வீட்டில் இருந்து அவரது தாயார் வந்திருந்தார். மேலும் அவருடன் சர்ப்ரைஸாக கதிரவனின் காதலியும் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதலாவதாக மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வைல்ட் கார்டு என்ட்ரி நுழைய உள்ளார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து டி.ஆர்.பி. கன்டென்ட் கொடுத்து வந்த தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் வெளியேறி விட்டார். தற்போது இவர் தனலட்சுமி மீண்டுமாக வைல்ட் கார்டு என்ட்ரீயாக உள்ளே வர உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மீண்டும் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய தனலட்சுமி பற்றி ஹாட்ஸ்டார் புதிய பதிவு வெளியிட்டு இருப்பதும் வைரலாகி வருகிறது, அதன்படி அதில், சில தொழில்நுட்ப காரணங்கள் காரணமாக தனலட்சுமி லைவில் வர முடியவில்லை என்று காரணத்தை கூறி இருக்கின்றனர். இது ரசிகர்களை மேலும் சந்தேகங்களை எழுப்பி, எப்படியும் இந்த வாரம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தனலட்சுமிக்கு வந்து விடுவார் என்று கூறி வருகின்றனர்.