Dream 11 Unplug: விடுமுறை நாட்களில் வேலை செய்ய சொன்னால் 1 லட்சம் ரூபாய் அபராதம்!

IT ஊழியர்கள் என்றால் பொதுவாக வருடத்தின் எல்லா நாட்களிலும் வேலை செய்வார்கள். அவர்களுக்கு இருக்கும் அதிகப்படியான வேலை அழுத்தம் காரணமாக அவர்களால் விடுமுறை நாட்களில் கூட நிம்மதியாக ஓய்வு எடுக்கமுடியாது.

குறிப்பாக அவர்களின் மேலதிகாரிகள் காலம் நேரம் பார்க்காமல் எந்த நேரத்திலும் தொலைபேசியில் அழைத்து வேலை சொல்வார்கள். இவர்களும் வாங்கும் சம்பளம் நிலைக்கவேண்டும் என்பதற்காக அனைத்தையும் சகித்துக்கொண்டு வேலை செய்வார்கள்.

பலர் இதன் காரணமாக குடும்பத்துடன் நேரம் செலவழிக்கமுடியாமல் அதிகப்படியான மன அழுத்தத்தில் வேலை செய்கிறார்கள். இதற்கு புதிய தீர்வு ஒன்றை இந்தியாவை சேர்ந்த IT நிறுவனமான Dream 11 நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதில் அந்த நிறுவனத்தில் விடுமுறையில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்தால் அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் என்று அறிவித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தால் இனி விடுமுறை எடுத்துக்கொள்ளும் ஊழியர்கள் அவர்களின் அலுவலக மொபைல் எண், இமெயில், மெசேஜ் அனா அனைத்தையும் நிறுத்திக்கொள்வார்கள். இவர்களை அதையும் மீறி தொந்தரவு செய்யும் மேலதிகாரிகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இந்த புதிய திட்டம் எதற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றால் முதலில் ஊழியர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கவும், இரண்டாவதாக நிறுவனம் எந்த ஒரு தனிப்பட்ட ஊழியரையும் சார்ந்திருக்கவில்லை என்பதை உணர்த்துவதே ஆகும்.

இதனால் ஊழியர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அவர்களின் குடும்பத்துடன் இனி நேரம் செலவழிக்கலாம் என்றும் இதனால் அவர்களால் நிம்மதியாக இனி ஓய்வு எடுக்கமுடியும் என்றும் புத்துணர்ச்சி பெறமுடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.