கடலில் மீன் பிடித்தபோது படகு விபத்து – மீனவர் உயிரிழப்பு.!

கடலில் மீன் பிடித்தபோது படகு மோதி கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழந்துள்ளார்.

நாகை மாவட்டம் செருதூர் பகுதியை சேர்ந்த எல்லப்பன் என்பவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (58), முருகவேல் ஆகியோருடன் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்பொழுது அவர்கள் கோடியகரைக்கு தேன் கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அக்கரப்பேட்டை பகுதியை சேர்ந்த அனிதா என்பவருக்கு சொந்தமான படகு இவர்களது பைபர் படகு மீது மோதியது.

இதனால் நிலை தடுமாறி படகு கவிழ்ந்ததால் மூன்று மீனவர்களும் கடலில் விழுந்தனர். இதைத்தொடர்ந்து அந்த படகில் இருந்தவர்கள் மூன்று மீனவர்களையும் மீட்டனர். ஆனால் அதில் ராஜேந்திரன் என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.