திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சொத்து தகராறு காரணமாக பெண் ஒருவர் இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கன்னிகைபேரைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது சித்தப்பா மகன் விஷால் ஆகியோர் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் இருந்த முருகன், மகன் நிதி, தாயார் மற்றும் மனைவி ரம்யா ஆகியோர் மீது விஷால் கையில் வைத்திருந்த இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே ரம்யா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய விஷாலை கைது செய்தனர்.