டெல்லியில் இளம்பெண் கொலைக்கு நீதி கேட்டு வெடித்தது போராட்டம்: கைதானவர்களில் ஒருவர் பாஜக நிர்வாகி என ஆம் ஆத்மி புகார்

டெல்லி: டெல்லியில் இளம் பெண் காரில் இழுத்து சென்று கொல்லப்பட்டதை கண்டித்து பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். டெல்லி சுல்தான்புரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அஞ்சலி சிங் என்ற இளம்பெண் கார்யேற்றி கொல்லப்பட்டது மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் மனோஜ் மிட்டல் என்பவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லியில் காவல்துறை கட்டுப்பாட்டில் ஒன்றிய அரசு வசம் இருப்பதால் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சிகள் நடக்கலாம் என்றும் அந்த கட்சி சந்தேகம் எழுப்பியுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் படி துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தி இருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே துணை நிலை ஆளுநர் வினைக்குமார் சக்சேனா பதவி விலக கோரி ஆளுநர் மாளிகை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீச்சி அடித்து விரட்டியதால் அப்பகுதியே போர்களமானது. சம்பவம் நடைபெற்ற சுல்தான்புரியில் உள்ள காவல் நிலையம் முன்பு திரண்ட நூறுக்கணக்கான பொதுமக்கள் இளம்பெண் கொடூர கொலைக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது ஒரு சில பெண்கள் விபத்து ஏற்படுத்திய காரை அடித்து நொறுங்கின. இளம் பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டதற்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் சமூகம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்த்த்தரவிட்டிருப்பதாக கூறியுள்ளார். இந்த கொடூர நிகழ்வால் தாம் வெட்கி தலை குனிவதாகவும் ஆளுநர் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.