சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்திருந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த உதய் சர்கார் மற்றும் ஜாகிர் உசேன் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
அதன் பின்னர் அவர்களிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது, ஒன்பது கிலோ கஞ்சா மற்றும் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இரண்டு போரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.