வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெஷாவர்: பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு எதிராக தஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) என்னும் பயங்கரவாத அமைப்பு போட்டி அரசு அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பயங்கரவாதம் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததன் அடிப்படையில் அவரது பதவி பறிபோனது.
இதனையடுத்து தற்போது ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக உள்ளார். இந்த நிலையில், தற்போதைய அரசுக்கு எதிராக போட்டி அரசை அமைத்துள்ளதாக தஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்னும் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ஆளும் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் விதமாக தஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு சார்பில் வெளியான அறிக்கையில், பாதுகாப்பு, நீதித்துறை, தகவல், அரசியல் விவகாரங்கள், பொருளாதார விவகாரங்கள், கல்வி, உளவுத்துறை, கட்டுமானத்துறை என பல்வேறு துறை அமைச்சகங்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
அரசுக்கு எதிராக போட்டி அரசை அமைத்துள்ளதாக பயங்கரவாத அமைப்பு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் அரசை எதிர்த்து போரிட்டு, அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி செய்துவருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement