கப்பலில் சடலமாக மீட்கப்பட்ட ரஷ்யர்… இந்தியாவில் இரண்டு வாரத்தில் மூன்றாவது நபர்: விலகாத மர்மம்


இந்தியாவின் ஒடிசா மாகாணத்தில் மர்மமான முறையில் ரஷ்யர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கப்பலில் சடலமாக மீட்கப்பட்ட ரஷ்யர்

ஒடிசா மாகாணத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் இது மூன்றாவது ரஷ்ய நபர் மரணமடைவதாக கூறப்படுகிறது.
51 வயதான Sergey Milyakov என்பவரே, நங்கூரமிட்டிருந்த கப்பலில், தமது அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய கப்பலில் முதன்மை பொறியாளராக செயல்பட்டுவந்த Sergey Milyakov மர்ம மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கப்பலில் சடலமாக மீட்கப்பட்ட ரஷ்யர்... இந்தியாவில் இரண்டு வாரத்தில் மூன்றாவது நபர்: விலகாத மர்மம் | Third Russian Found Dead Mysterious Circumstances

@E2W

முன்னதாக ஒடிசா மாகாணத்தில் பிரபல ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான Pavel Antov மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவரது நண்பரும், சக பயணியுமான Vladimir Bydanov மாரடைப்பால் மரணமடைந்துள்ள நிலையில், அந்த துயரம் தாங்க முடியாமல் Pavel Antov தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்

ஒன்றிணைந்த ரஷ்யா என்ற அரசியல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எதிர்ப்பாளருமான Pavel Antov கடந்த டிசம்பர் 24ம் திகதி தற்கொலை செய்துகொண்டார்.

கப்பலில் சடலமாக மீட்கப்பட்ட ரஷ்யர்... இந்தியாவில் இரண்டு வாரத்தில் மூன்றாவது நபர்: விலகாத மர்மம் | Third Russian Found Dead Mysterious Circumstances

@rayagada

இந்த விவகாரம் தொடர்பில் அனைத்து கோணங்களிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக கூறும் உள்ளூர் பொலிசார், ஹொட்டல் மொட்டைமாடியில் இருந்து அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றே கூறுகின்றனர்.

மேலும், உக்ரைன் மீதான போரை கடுமையாக விமர்சித்தவர் இந்த Pavel Antov. தற்போது கப்பல் முதன்மை பொறியாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட, மூன்று மரணத்திலும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.