பாஜக அமைச்சரின் கான்வாய் வாகனம் மோதி விபத்து: பயணிகள், போலீசார் படுகாயம்

தாமோ: மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டம் தாமோ-சதர்பூர் நெடுஞ்சாலையில் உள்ள பிபாரியா சோதனைச் சாவடி அருகே ஒன்றிய பாஜக அமைச்சர் பிரஹலாத் படேல் காரில் ெசன்றார். அந்த காருக்கு பின்னால் அவரது பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. அப்போது  அமைச்சர் பிரஹலாத் படேலின் கார் பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனம், அவ்வழியாக சென்ற பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், காரில் இருந்த அமைச்சர் வாகனத்தில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு டாமோ மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தில் 3 போலீசார் காயமடைந்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர், சிகிச்சை பெற்று வருவோருக்கு நேரில் ஆறுதல் கூறிவிட்டு சென்றார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.