ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் உயிர் தப்பிய பிரான்ஸ் ஊடகவியலாளர்: ஒரு அதிர்ச்சி வீடியோ



உக்ரைனில் நேரலையில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குத் தப்புவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. 

நேரலையில் வெடித்த ஏவுகணை

பிரான்ஸ் ஊடகவியலாளரான Paul Gasnier என்பவர் உக்ரைனிலிருந்து நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, திடீரென அவரது தலைக்குப் பின்னால் ஏவுகணை ஒன்று விழுந்து வெடிப்பதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

சட்டென Paul தலைகுனிந்தபடி அங்கிருந்து ஓட, தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் அதிர்ச்சியடைகிறார்.

ஊடகவியலாளரின் நிலை

இந்தக் காட்சியைக் கண்டவர்கள் Paulஇன் நிலைமை என்ன ஆனதோ என அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், அவருக்கு எதுவும் ஆகவில்லை என பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் Donetsk மாகாணத்திலுள்ள Druzhkivka நகரில் நடந்துள்ளது.

இந்த தாக்குதலில் Paul தப்பினாலும், இதற்கு முன், சென்ற ஆண்டு இதேபோல செய்தி சேகரித்துக்கொண்டிருந்த Leclerc-Imhoff என்னும் பிரான்ஸ் ஊடகவியலாளர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்ததும், அந்த தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ட்விட்டரில் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.