Oneplus 11 5G சீனாவில் வெளியாகியது! 100W பாஸ்ட் சார்ஜிங் வசதி!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான One plus நிறுவனம் அதன் புதிய One plus 11 5G மாடலை வெளியிட்டுள்ளது. இந்த போன் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் சீனாவில் 3,999 (இந்திய ரூபாய் மதிப்பில் 48,000 ஆயிரம் ரூபாய்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 16GB RAM + 256GB ஸ்டோரேஜ் விலை 4,399 CNY (53000 ஆயிரம் ரூபாய்) மற்றும் 16GB RAM + 512GB ஸ்டோரேஜ் வசதி CNY 4,899 (59,000 ஆயிரம் ரூபாய்) விலையில் கிடைக்கிறது.

Oneplus Buds 2 Pro இந்த போன் Endless Black மற்றும் Instant Blue என இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வரும் ஜனவரி 9 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 7 அன்று வெளியாகவுள்ளது. இதனுடன் One plus Buds Pro 2 ஏர்போன் உடன் வெளியாகப்போகிறது.
Oneplus 11 Processorஇந்த ஸ்மார்ட்போன் டிஸ்பிலே 525 ppi மற்றும் அதிகபட்ச பிரைட்னஸ் அளவாக 1300nits உள்ளது. இதில் Corning Gorilla Glass 7 உள்ளது. இதன் டிஸ்பிலே முழு HDR மற்றும் Dolby Vision Format போன்று உள்ளது. இதைத்தவிர புதிய Octa Core 4nm Snapdragon 8 Gen 2 SoC மற்றும் 16GB LPDDR5x RAM ஆப்ஷன்கள், Adreno 740 GPU போன்றவை உள்ளன.
Oneplus 11 டிஸ்பிலேஇந்த போன் டூயல் SIM வசதியுடன் வெளியாகியுள்ளது. இதில் Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட Color OS 13.0 உள்ளது. இதில் 6.7 இன்ச் QHD+ (1440×3216 Pixels) Samsung LTPO 3.0 AMOLED டிஸ்பிலே 120HZ refresh rate உள்ளது.

Oneplus 11 Processorமற்ற முக்கிய வசதிகளாக 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.3, Beidou, Glonass, Galileo, GPS, and NFC. இந்த போனில் முக்கிய சென்சார் ஆப்ஷன்களாக e-compass, gyroscope, g-sensor, rear colour temperature sensor, proximity sensor, மற்றும் Qualcomm sensor core உள்ளது.
கேமரா வசதிகள் இந்த போன் 50+48+32MP ட்ரிபிள் கேமரா வசதியுடன் வருகிறது. இதில் 50 MP Sony IMX890 48MP Sony IMX 58 அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 32MP போர்ட்ரைட் சென்சார் போன்ற வசதிகள் உள்ளது. இதில் செல்பி எடுக்க 16MP கேமரா வசதி உள்ளது. இதில் 512GB அதிகபட்ச ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
Oneplus 11 கேமரா டிசைன் இந்த போனில் முந்தய One plus 10 மாடலில் உள்ள அதே ரவுண்டு கேமரா டிசைன் இடம்பெற்றுள்ளது. பார்ப்பதற்கு 10 சீரிஸ் போன் போலவே உள்ளது.
Oneplus 11 பாஸ்ட் சார்ஜ்ர்இதனுடன் Indisplay fingerPrint sensor, Dolby Atmos கொண்ட ஸ்டேரியோ ஸ்பீக்கர் வசதி உள்ளது. இதில் 5000mAh பேட்டரி, 100W Super VOOC பாஸ்ட் சார்ஜ்ர் போன்றவை உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.