அடேங்கப்பா! இருமடங்காக உயர்ந்த பிரதீப் ரங்கநாதன் சம்பளம்!

Pradeep Ranganathan Salary: கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பிரதீப் தானே ஹீரோவாக நடித்து ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் லவ் டுடே படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இவானா மற்றும் ரவீனா ரவி, சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடத்திருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதற்கிடையில் லவ் டுடே படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதேபோல் இந்த படம் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, தெலுங்கு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட ரூ.7 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த ரூ.90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு பெரியளவில் லாபத்தை ஈட்டி தந்தது. 

லவ் டுடே படம் மூலம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளாராம். லவ் டுடே படத்துக்காக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றதாகவும், தற்போது தனது அடுத்த படத்துக்கு 3 கோடி ரூபாய்யை சம்பளமாக பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்த இந்த ‘லவ் டுடே’ படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.