ராமநாதபுரம் தொகுதியில் மோடி… 2024 தேர்தலில் ஜெயிக்க விடுவார்களா தமிழர்கள்?

வரும் 2024 மக்களவை தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த இரண்டு தேர்தல்களில் அசுர பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பாஜக, மூன்றாவது முறை வெல்வதற்கு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த 2019ல் வட இந்தியாவில் இருந்த மோடி அலை தற்போது இல்லை என்ற பேச்சு அடிபடுகிறது. எனவே தெற்கில் தனது கவனத்தை திருப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

காசி டூ ராமேஸ்வரம்அந்த வகையில் பிரதமர் மோடி போட்டியிட்டு வென்ற வாரணாசிக்கு நிகரான அடுத்த புனித பூமி ராமேஸ்வரம். இதை உள்ளடக்கிய ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக ஒரு செய்தியை கிளப்பி விட்டுள்ளனர். இந்த விஷயம் தான் தற்போது காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்துத்துவாவை அடிப்படை சித்தாந்தமாக கொண்டு செயல்பட்டு வரும் பாஜக, காசி முதல் ராமேஸ்வரம் வரை தங்களது கொடியை நாட்ட வேண்டும் என்ற அரசியல் கணக்கில் வியூகம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ராமநாதபுரத்தில் மோடிஏனெனில் இரண்டுமே புனித பூமி என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. ராமரை கொண்டாடும் பாஜக, ராமருக்காக அயோத்தியில் பிரம்மாண்ட கோயிலை கட்டியெழுப்பும் பாஜக, அவர் வந்து சென்றதாக கூறப்படும் ராமேஸ்வரத்தில் கொடி நாட்ட வேண்டும் விரும்புவது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு பிரதமர் மோடி போட்டியிடுவார் என்பது தான் ஹைலைட். இதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? அப்படி நின்றால் பிரதமர் மோடி வெற்றி பெறுவாரா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
தெற்கில் வலுவான எதிர்ப்புஅரசியல் ரீதியாக பார்க்கும் போது வாரணாசியும், ராமநாதபுரமும் ஒன்றல்ல. வடக்கில் இந்துத்துவா மீதான ஈர்ப்பு மக்கள் மத்தியில் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் தெற்கில் அப்படியல்ல. ஒன்று கம்யூனிசம் விரட்டும். இல்லையெனில் திராவிடம் டஃப் கொடுக்கும். பாஜகவை பொறுத்தவரை இந்துத்துவா சித்தாந்தத்தை முன்னிறுத்துவதை தாண்டி, சமூக ரீதியில் வாக்குகளை கவரும் வேலைகளை செய்து வருகிறது.
தேவரை முன்னிறுத்தும் பாஜகஅப்படி பார்த்தால் ராமநாதபுரம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியாக உள்ளது. மறவர் பூமி என்ற பேச்சும் உண்டு. தேவர் சமூக மக்களுக்கு அதிக அளவில் வசிக்கின்றனர். சமீப காலமாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரை முன்னிறுத்துவதை, திராவிடத்திற்கு எதிராக செயல்பட்டவர் எனக் கூறுவதை பாஜக வாடிக்கையாக கொண்டு வருகிறது. ஆனால் அதை வைத்து ராமநாதபுரத்தில் சாதித்துவிட முடியாது.
மோடி திட்டம் என்ன?ஏனெனில் அவரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் அடைத்து விட முடியாது. எனவே இந்த விஷயம் பாஜகவிற்கு எடுபடுவது கடினம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த சூழலில் தெற்கில் நிற்க வேண்டும் என்ற கட்சியினரின் விருப்பத்தை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வாரா? என்ற கேள்வி எழுகிறது. மோடியை பொறுத்தவரை அதிரடியாக, யாருக்கும் பயப்படாமல் முடிவுகள் எடுப்பதில் வல்லவர்.
அப்படி ஒரு வாய்ப்பில்லைதேர்தல் வந்துவிட்டால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படக் கூடியவர் பிரதமர் மோடி. அப்படியிருக்கையில் திராவிட பூமியாக நிமிர்ந்து நிற்கும் ராமநாதபுரத்தில், பல்வேறு சமூகத்தினர் ஒன்றாக வாழ்ந்து வரும் ராமேஸ்வரத்தில், 2023ஆம் ஆண்டிலும் மோடி எதிர்ப்பு பெரிதாக இருக்கும் தமிழகத்தில் போட்டியிட முன்வர மாட்டார் என்றே சொல்லப்படுகிறது.
தமிழர்களின் எதிர்வினைமோடிக்கு இருக்கும் புகழ் வெளிச்சத்தில் டெபாசிட் வேண்டும் என்றால் வாங்கலாம். ஆனால் வெற்றி என்பது மிக மிக கடினம். அவ்வளவு எளிதில் திராவிட கட்சிகள் விட்டு விடாது. இதன் பின்னணியில் தமிழுக்கு, தமிழர்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செய்த விஷயங்கள் எதிர்வினை ஆற்றும் எனக் கூறுகின்றனர். எனவே ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவது சாத்தியமில்லை என்ற பேச்சே அதிகம் ஒலிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.