கொழும்பு : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் பிரவாசி பாரதீய சம்மான் விருதுக்கு, இலங்கையின் வீரகேசரி தமிழ் நாளிதழின் நிர்வாக ஆசிரியர் சிவக்குமார் நடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் இந்தியர்களைப் பாதுகாக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் பிரவாசி பாரதீய சம்மான் விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. நம் நாட்டின் உயரிய விருதான இதற்கு, இலங்கையைச் சேர்ந்த வீரகேசரி தமிழ் நாளிதழின் நிர்வாக ஆசிரியரான சிவக்குமார் நடேசன், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து இலங்கையின் இந்திய துாதரக அதிகாரி கூறியதாவது:இந்திய வம்சாவளி மக்களின் உலகளாவிய அமைப்பின் தலைவராக உள்ள சிவகுமார் நடேசன், சமூக சேவையில் பெருந்தொண்டு ஆற்றி வருகிறார். இந்தியா – இலங்கை இடையே கலாசார மற்றும் வணிக பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக, இந்திய கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்தியாவின் பாரம்பரிய இசைக் கலையை இலங்கையில் வளர்க்க, பெருமளவு உதவியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில், வரும் 8 முதல் 10ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், சிவகுமார் நடேசன் உள்ளிட்ட 27 பேருக்கு பிரவாசி பாரதீய சம்மான் விருதுகளை, ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கவுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement