பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டதாலும், நிறுவனத்தின் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், பொருளாதார மந்தம், பணவீக்கம் உள்ளிட்டவற்றால், செலவுகளை குறைக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.