
சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 ரூபாய் குறைந்துள்ளது.
சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்றத்திலேயே இருந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.42 ஆயிரத்தை நெருங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த நிலையே தொடர்ந்தால் இந்த ஆண்டு முடிவதற்குள் தங்கம் ஒரு கிராம் 6,000ஐ தாண்டும் என வல்லுனர்கள் கணித்திருந்தனர்.

இந்த மாதம் ஒரு சவரன் ரூ.40,840 என்று இருந்த தங்கத்தின் விலை 42 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று விலையில் சற்று இறக்கம் கண்ட தங்கத்தின் விலை, இன்று கிராமிற்கு 34 ரூபாய் குறைந்து ரூ.5190க்கு விற்பனையானது. அதன்படி ஒரு சவரனுக்கு 41,520 ரூபாயாக உள்ளது.
இதேபொல வெள்ளி விலை ஒரு கிராமிற்கு 50 பைசா குறைந்து, 73.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 73,500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
newstm.in