கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு அதிர்ச்சி தகவல்| Shocking information for men affected by Corona

புதுடில்லி,:பீஹாரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்து உயிரணுக்களின் வீரியம் குறைவதாக தெரியவந்துள்ளது.

பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், சமீபத்தில் ௩௦ ஆண்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

இவர்கள் அனைவரும், ௨௦௨௦ அக்., மற்றும் ௨௦௨௧ ஏப்., கால இடைவெளியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ௧௯ – ௪௩ வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவர்களது விந்தணுவில், கொரோனாவுக்கு காரணமான, ‘சார்ஸ்கோவ் – ௨’ வைரஸ் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

விந்தணுவில் சார்ஸ்கோவ் – ௨ வைரஸ் கலந்திருப்பதால், விந்தணுவின் அடர்த்தி, கருவுறுவதற்கான திறன் உள்ளிட்டவற்றில் பாதிப்பு காணப்பட்டது.

ஆர்.டி.பி.சி.ஆர்., முறையில் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையில், அவர்களுக்கு விந்தணுவின் வீரியம் குறைந்திருப்பது தெரியவந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.