தெற்கு ரயில்வே கொடுத்த மெகா அப்டேட்… ஜனவரி 2023ல் ரயில் சேவையில் மாற்றம்!

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஜனவரி 7, 11, 27 ஆகிய தேதிகளில் காட்பாடியில் காலை 9.30 மணிக்கு புறப்படும் 06417 என்ற எண் கொண்ட காட்பாடி – ஜோலார்பேட்டை MEMU எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து நண்பகல் 12.40 மணிக்கு புறப்படும் 06418 என்ற எண் கொண்ட ரயிலும் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முழுவதும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

இதையடுத்து ஜனவரி 24ஆம் தேதி காலை 10 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் புறப்படும் 06736 என்ற எண் கொண்ட வேலூர் கன்டோன்மென்ட் – அரக்கோணம் MEMU எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் அரக்கோணத்தில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்படும் 06735 என்ற எண் கொண்ட ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகுதியளவு ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

ரயில் எண் 12680 கொண்ட கோவை – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜனவரி 24ஆம் தேதி அன்று காட்பாடி மற்றும் சென்னை சென்ட்ரல் இடையில் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.ரயில் எண் 12610 கொண்ட மைசூரு – சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜனவரி 24ஆம் தேதி அன்று காட்பாடி மற்றும் சென்னை சென்ட்ரல் இடையில் ரத்து செய்யப்படுகிறது.ரயில் எண் 12679 கொண்ட சென்னை சென்ட்ரல் – கோவை இன்டர்சிட்டி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜனவரி 24ஆம் தேதி அன்று சென்னை சென்ட்ரல் மற்றும் காட்பாடி இடையில் ரத்து செய்யப்படுகிறது.ரயில் எண் 12607 கொண்ட சென்னை சென்ட்ரல் – கே.எஸ்.ஆர் பெங்களூரு சிட்டி லால்பாக் எக்ஸ்பிரஸ் ஜனவரி 24ஆம் தேதி சென்னை சென்ட்ரல் மற்றும் காட்பாடி இடையில் ரத்து செய்யப்படுகிறது.

நேரமாற்றம் செய்யப்பட்ட ரயில்கள்

ரயில் எண் 22601 கொண்ட சென்னை சென்ட்ரல் – சாய்நகர் ஷீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜனவரி 11ஆம் தேதி காலை 10.20 மணிக்கு பதிலாக 12.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.ரயில் எண் 22637 கொண்ட சென்னை சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜனவரி 11ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு பதிலாக 1.35 மணிக்கு புறப்படும்.ரயில் எண் 12609 கொண்ட சென்னை சென்ட்ரல் – மைசூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஜனவரி 11ஆம் தேதி அன்று பிற்பகல் 1.45 மணிக்கு பதிலாக 1.55 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.