ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என்று உருக்கமாக கூறினார்.
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த, “சுதாகர் எனது நீண்டகால நண்பர். என் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருந்தார்.
அவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. அவருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால், அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று கூறினார்.