நாமக்கல் அருகே பெரியம்மை நோய் தாக்குதலால் 20 நாட்களில் 50க்கும் மேற்பட்ட பசு மாடுகள் உயிரிழப்பு: விவசாயிகள் வேதனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியம்மை நோய் தாக்குதலால் பசு மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் பெரியமணலி ஜேடர்பாளையம் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ளன. இப்பகுதிகளில் முறையான தடுப்பூசி செலுத்தப்படாததால் பசுமாடுகளை தொடர்ந்து தற்போது கன்றுக்குட்டிகளும் கோமாரி, பெரியம்மை போன்ற நோய்கள் தாக்கி உயிரிழந்து வருவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20 நாட்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் கன்று குட்டிகள் உயிரிழந்து இருப்பதாக கூறியிருக்கும் விவசாயிகள், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே பெரியம்மை நோயின் தீவிர தன்மையை உணர்ந்து கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் வைத்து மாடுகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்று ராசிபுரம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.