Pope Benedict XVI: பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார் போப் 16ம் பெனடிக்ட்

வாடிகன்: உலக கத்தோலிக்கர்களின் தலைவராக திகழ்ந்த, முன்னாள் போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகளில் ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டனர். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 31ம் தேதி மரணம் அடைந்த போப் 16ம் பெனடிக்டிடின் உடல்m 5 நாட்களாக  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று, ஜனவரி 5 ஆம் தேதி 16 மறைந்த போப்பின் இறுதி சடங்குகள் நடைபெற்றன.

போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட்டுக்கு அஞ்சலி செலுத்த உலகம் முழுவதும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னாள் போப் இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப்பின், போப்பாக பதவியேற்ற போப் 16-ம் பெனடிக்ட், ஜெர்மனியில் கடந்த 1927-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்தார்.

ஜெர்மனி ராணுவத்தில் பணியாற்றிய பிறகு, 1945-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து வெளியேறிய போப் 16, மறையும்போது அவரது வயது 95. போப்பாண்டவராக 8 ஆண்டு பதவி வகித்த 16-ம் பெனடிக்ட், தனது பதவிக்காலத்தில் பல சவால்களை சந்தித்தார்.

பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பெரிய அளவில் வெளியான போது, அவர்களின் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்ட மாண்பு கொண்ட பண்பாளர் 16-ம் பெனடிக்ட், ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்தார் 16-ம் பெனடிக்ட். இது தொடர்பாக பலராலும் விமர்சிக்கப்பட்ட நிலையில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததாலும் இவரது தலைமை குறித்தும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

மேலும் படிக்க | ’18 ஆயிரம் பேரை தூக்க போறோம்…’ – ஓப்பனாக அறிவித்த பிரபல நிறுவனத்தின் சிஇஓ… என்னங்க சொல்றீங்க?

முன்னால் போப், 16-ம் பெனடிக்ட் மறைவு,கோவையில்  சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை

முன்னால் போப், 16-ம் பெனடிக்ட் மறைவையொட்டி, அவரது ஆன்மா சாந்தியடையும் வகையில், கோவை கத்தோலிக்க  மறை மாவட்டம் சார்பாக கோவையில்  சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது

உலக கத்தோலிக்கர்களின் தலைவரான முன்னால் போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 31ம் தேதி மரணம் அடைந்தார். இவரது உடல் 5 நாட்களாக  அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 5 ஆம் தேதி 16 மறைந்த போப்பின் இறுதி சடங்குகள் நடைபெற்றது.

மேலும் படிக்க | Sri Lanka Milk: பால் உற்பத்தியில் தன்னிறைவடைய இலங்கைக்கு உதவும் இந்தியா

இதில், உலகம் முழுவதும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் கோவை, கத்தோரிக்க மறை மாவட்டம் சார்பாக, டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மிக்கேல் அதி தூதர்  ஆலயத்தில் மறைந்த  போப்பாண்டவரின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.. 

கோவை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ்  தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடை பெற்றது. 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிஷப் தாமஸ் அக்குவைனஸ்,மறைந்த போப் 16 ஆம் பெனடிக்ட் எட்டு ஆண்டு காலம் பதவியில் இருந்த போது,கிறிஸ்தவ இளம் தலைமுறையினரை  ஊக்குவிக்கும் வகையில், இறையியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டார்.சிறந்த ஜீனியஸான மறைந்த போப் ஏராளமான நூல்களை எழுதி, திருச்சபையின் போதனைகளை வெளியிடுவதில் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தார் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | ரூ 139 ரீசார்ஜ் பிளான்..டெய்லி 2ஜிபி டேட்டா..அசரவைக்கும் பிஎஸ்என்எல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.