இலங்கை போக்குவரத்து சபையின் செயல் திறனை விஸ்தரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட 75 பேருந்துகள் அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் முன்தினம் (05) சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.
குறித்த பேருந்துகளுள் 25 பேருந்துகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய, வடக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
EPDP news.