நியூஸிலாந்து: 11 நாட்கள் தொடர்ந்து பறந்து பார்-டெயில் காட்விட் பறவை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. வட அமெரிக்க மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் என்ற பறவை இனம் உள்ளது. இந்த பறவை இனம், குளிர் காலங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த பறவை மற்ற பறவையினங்கள் போல, அடிக்கடி ஓய்வெடுக்காது, அதேபோல இது எப்போதாவது தான் தரையிறங்கும். அதே வேலை இது தரையிறங்கினாலும் தண்ணீர் இருக்கும் இடங்களில் தரையிறங்காது. […]
