சென்னை: சென்னை அருகே தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். தீ மளமளவென பரவி வருவதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
