புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஒத்திவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளையொட்டி ஜனவரி 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையிலான அதிகாரிகள், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் கூறி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி தர மறுத்துவிட்டனர். இதைக்கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தச்சங்குறிச்சியில் […]
