புதுச்சேரி : புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய தேக்வாண்டோ போட்டியின் பரிசளிப்பு விழா இன்று நடக்கிறது.
தேசிய அளவிலான கராத்தே, கிக் பாக்சிங் மற்றும் தேக்வாண்டோ போட்டிகள் உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது.
மூன்று நாள் நடைபெறும் இப்போட்டி துவக்க விழாவிற்கு புதுச்சேரி மாநில அனைத்து விளையாட்டு வீரர்களின் நலச்சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.
சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் ஓபன் ஆகிய எடை பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டிகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலை நடைபெறும் விழாவில் ஐ.ஜி., சந்திரன் பரிசுகள் வழங்குகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement