இந்தியாவை வீழ்த்தியே ஆகனும்! உத்வேகத்துடன் களமிறங்கும் இலங்கை கிரிக்கெட் அணி


இந்திய அணியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற உத்வேகத்துடன் இன்று 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி களம் இறங்குகிறது.

இந்தியா முன்னிலை

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
தொடரில் நீடிக்க இலங்கை அணி இன்று வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.

இந்தியாவை வீழ்த்தியே ஆகனும்! உத்வேகத்துடன் களமிறங்கும் இலங்கை கிரிக்கெட் அணி | India Vs Srilanka 2Nd Odi

insidesport

பந்துவீச்சு

முதல் ஆட்டத்தில் கேப்டன் தசுன் ஷனகாவின் அதிரடியான சதமும் பதும் நிசாங்காவின் 72 ரன் சேர்ப்பும் இலங்கைக்கு முக்கிய பங்கை வகித்தது.
பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கிலும் கச்சிதமாக செயல்பட்டால் இந்தியாவை இலங்கை வீழ்த்த முடியும். 

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு,

இந்தியா

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.


இலங்கை

பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, மதுஷன்கா அல்லது லாஹிரு குமாரா. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.