கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இவர் திருமணமான 26 வயது பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் சில மெசேஜ்களை அனுப்பியுள்ளார். இது பெண்ணின் உறவினர்களுக்கு தெரியவந்ததும் இளைஞரை கண்டித்துள்ளனர்.
ஆனால், அந்த இளைஞர் தொடர்ந்து பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக தண்ணீர் வேண்டும் என்று கேட்டு உள்ளே நுழைந்துள்ளார். இதை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் மூன்று பேர் பிடித்து வீட்டிற்குள் வைத்து அடி, அடியென்று அடித்துள்ளனர். பின் வாயை மூடி கை, கால்களை கட்டி போட்டு நிர்வாணமாக்கி வீட்டில் இருந்த சொம்பை எடுத்து அதை கேஸ் அடுப்பில் வைத்து சூடேற்றி அவரது அந்தரங்க உறுப்பில் சூடு வைத்து இருக்கின்றனர்.
இதனால், இளைஞர் அலறி துடித்த நிலையில் வாயில் துணி வைத்து திணித்ததால் சத்தம் வெளியில் கேட்கவில்லை. அவரது உடலில் எட்டு இடங்களில் சூடு வைத்து வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, அவரை கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து விட்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றனர். போலீசார் அந்த இளைஞரிடம் விசாரித்ததில் தனக்கு நடந்ததை அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மூன்று பேரும் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.