அர்ஜென்டினாவில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் நான்கு இளம் சகோதரர்கள் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவே விபத்துக்கு காரணம்
குறித்த சிறார்களின் தாயாரின் காதலர் 5 டன் அளவுக்கு துண்டு கற்களை வீட்டின் கூரை மீது பாதுகாத்து வந்ததாகவும், இதுவே விபத்துக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
@newsflash
ஜனவரி 9ம் திகதி நடந்த இந்த விபத்தில் 4 வயதான இரட்டையர்கள், இவர்களின் சகோதரர்கள் 6 வயது மற்றும் 10 வயது ஆகியோர் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 51 வயதான Catalino Daniel Lopez என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு அது எனவும், அவர் அந்த குடியிருப்பின் தட்டையான கூரை மீது பொருட்களை பாதுகாக்கவும் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடுமையான அழுத்தம் தாங்காமல், கூரை இடிந்து விழுந்துள்ளது என்றே முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, அந்த குடும்பமானது இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் லோபஸ் வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளது.
@jampress
தற்போது இந்த விவகாரத்தில் லோபஸ் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது, இருப்பினும், பதில் கூறாமல் இருப்பது அவரது உரிமை என்பதால் அவர் அதையே பின்பற்றி வருவதாக தெரியவந்துள்ளது.
உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை
இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட அந்த தாயார், எனது பிள்ளைகள் நால்வரும் இறந்துள்ளனர், நானும் இறப்பதாகவே உனர்கிறேன், இன்னும் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனது செல்வங்கள் என்னை தவிக்கவிட்டு சென்றுள்ளனர், இது வெறும் கனவாக இருக்காதா என ஆசைப்படுகிறேன் எனவும் அவர் கண்கலங்கியுள்ளார்.
அவரது வேறு இரு பிள்ளைகள் சம்பவத்தின் போது குடியிருப்பினுள் இல்லை என்றே கூறப்படுகிறது.
@jampress
அதில் ஒருவரே அவசர உதவி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளார்.
மேலும், கூரையில் இருந்து தூசு கிளம்புவதை அறிந்து தாயாரிடம் என்ன நடக்கிறது என விசாரிக்க சென்றதால் அவர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது இரட்டையர்கள் தூக்கத்தில் இருந்துள்ளனர். எஞ்சிய இருவரும் படுக்கையில் விளையாடியபடி இருந்துள்ளனர்.
விபத்தினை அடுத்து மூவர் சம்பவயிடத்திலேயே மரணமடைய, நான்காவது சிறுவன் மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியில் இறந்துள்ளார்.