ஆவின் ஊழியர்கள் ஹேப்பி; வேற லெவல் தகவல் வெளியானது!

பொங்கல் பண்டிகையை ஒட்டி போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் 1.17 லட்சம் ஊழியர்களுக்கு ரூ.7.01 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை செயலர் கே.கோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் அரசு போக்குவரத்து கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவையானது அளிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்துஅறிவுரை பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது ஒரு லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் 2022ம் ஆண்டில் 91 முதல் 151 நாட்கள் பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வீதம், 151 முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.195 வீதம், 200 நாட்கள், அதற்கும் மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வீதம் பொங்கல் ‘சாதனை ஊக்கத் தொகை’ வழங்கப்படும்.

இந்த உத்தரவின்படி போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 129 பணியாளர்களுக்கும் மொத்தம் ரூ.7 கோடியே ஒரு லட்சம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த தொகை முதல்வரின் உத்தரவுக்கு இணங்க வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 30 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை நேரடியாக வழங்கினார்.

தமிழ்நாடு முதல்வர்
மு.க.ஸ்டாலின்
ஆவின் பணியாளர்கள் அனைவருக்கும் இந்த 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் 1325 பணியாளர்களுக்கு ரூ.12.58 லட்சம், மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 2,969 பணியாளர்களுக்கு ரூ.28.47 லட்சம் மற்றும் தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 22,895 பணியாளர்களுக்கு ரூ.228.95 லட்சம் ஆக, மொத்தம் 27,189 பணியாளர்களுக்கு ரூ.270 லட்சம் பொங்கல் பண்டிகை ஊக்கத்தொகையை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று 30 பணியாளர்களுக்கு நேரடியாக வழங்கினார்.

இதற்கான மொத்த செலவீனம் ரூ.270 லட்சம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் நிதியில் இருந்து செலவிடப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 603 சங்கங்களில் உள்ள 98,877 பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு, சங்கங்கள் ஈட்டிய லாபத்தில் இருந்து ரூ.1,295.59 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.