இதுவரை இல்லாத அளவு வட இந்தியாவில் – 4 டிகிரி குளிர் அலை வீசும்

புதுடெல்லி: வட இந்தியாவில் வெப்பநிலை இந்த வாரம் சிறிது சிறிதாக அதிகரித்து வந்தாலும், ஜனவரி 2023 இல் இன்னும் குளிர் அதிகரிக்ககூடும் என்று வானிலை நிபுணர் ஒருவர் கணித்துள்ளார், இந்த வார இறுதியில் இருந்து வட இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவு குளிர் நிலவும் என்று எச்சரிக்கைகளும், முன்னறிவிப்புகளும் வரத் தொடங்கிவிட்டன. ஜனவரி 14 மற்றும் 19 க்கு இடையில் கடுமையான குளிர் ஏற்படும் என்றும், அதில், குறிப்பாக ஜனவரி 16 முதல் 18 வரை குளிர் உச்சத்தில் இருக்கும் என்று ஆன்லைன் வானிலை தளமான லைவ் வெதர் ஆஃப் இந்தியாவின் நிறுவனர் நவ்தீப் தஹியா ட்வீட் செய்துள்ளார்.

தேசிய தலைநகரில் நேற்று லேசான மழைப்பொழிவு ஏற்பட்டது, கடும் குளிரை சில நாட்களுக்கு குறைத்தாலும், டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களின் தொலைதூரப் பகுதிகளில் குளிர் நிலைமை மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கூறியுள்ளது.

மூடுபனி நிலைமை மூன்று நாட்களுக்குள் மாறலாம் என்றாலும் “காலை உறைபனி ” அல்லது “குளிர் அதிகரிக்கும்” என்றும் வானிலை ஆய்வு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜனவரி 2023 வரலாற்று ரீதியாக மிகவும் குளிராக மாதமாக இருக்கலாம், ஒருவேளை 21 ஆம் நூற்றாண்டிற்கு இதுவரை அனுபவம் இல்லாத குளிராகவும் இருக்கலாம் என்றும் வானிலை நிபுணர் தஹியா ட்வீட் செய்துள்ளார்.

கடந்த பல வாரங்களாக எலும்பைக் குளிரச் செய்யும் இரவுகளுக்குப் பிறகு, வடமேற்கு இந்தியாவில் வசிப்பவர்களுக்கு இந்த வாரம் கடுமையான குளிரில் இருந்து தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைத்துள்ளது.

இன்று வட இந்தியாவின் வடமேற்கு சமவெளிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் 2-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குளிர் அதிகரிக்கும் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது.  

தலைநகர் டெல்லி, கடந்த 23 ஆண்டுகளில் மூன்றாவது மிக மோசமான குளிரைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு சில நாட்களுக்குப் பிறகு, தில்லியில் வியாழன் அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 9.3 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது வழக்கமாக குளிர்காலத்தில் இருக்கும் சராசரி செல்சியஸை விட இரண்டு புள்ளிகள் அதிகம். 

“2006 ஆம் ஆண்டில் இதேபோன்ற சூழ்நிலையை அனுபவித்தபோது, ​​குறைந்த வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டது. 2013 இல், இதேபோன்ற குளிர் காலநிலை இருந்தது,” ஐஎம்டியின் வானிலை விஞ்ஞானி ஆர்கே ஜெனமணி, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் அடுத்த சில நாட்களில் தூறல் மற்றும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், இது குளிரை கடுமையாக்கும்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.