பமாகோ:மாலியில், இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், அல்- குவைதா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2020 மற்றும் 2021ல் நடந்த இரண்டு கிளர்ச்சிகளுக்குப் பின், அந்நாடு ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
ஆனால், பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்த ராணுவம் திணறி வருகிறது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் படைகள் மாலியில் முகாமிட்டு அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வந்தது.
மாலியின் ஜுன்டா ராணுவத்துடன் ஏற்பட்டகருத்து மோதலுக்குப்பின், பிரான்ஸ் படைகள் அந்நாட்டை விட்டுகடந்த ஆண்டு வெளியேறியது. இதை தொடர்ந்து அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்க துவங்கின.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 42 வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் நடந்த சண்டையில், 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று நாட்டின் பல பகுதிகளில், அல் – குவைதா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பல்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement